கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கைலாசா என்ற பெயரில் தனி நாடு உருவாக்கியிருப்பதாக தகவல்களை வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா. மேலும், தனது நாட்டுக்கு கொடி, வங்கி, நாணயம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், கைலாசா நாட்டில் உணவகங்களை திறக்க அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஒட்டல் அதிபர் குமார் என்பவர் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதினார்.
இதுதொடர்பாக, நேரலையில் தோன்றி பேசிய நித்யானந்தா, தனது நிர்வாகிகளிடம் கூறி, கைலாசாவில் ஓட்டல் திறக்க முன்னுரிமை அளிக்கச் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.