jeevan-works-logo
booked.net
ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா..மீண்டும் அதிகரிக்கும் தொற்று.. சென்னையில் நிலவரம் என்ன..?

Published: Monday, Aug 24,2020 ,07:43:04am

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 97பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,500ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1,298 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,25,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, கோவையில் 392 பேருக்கும், கடலூரில் 380 பேருக்கும், திருவள்ளூரில் 354 பேருக்கும், செங்கல்பட்டில் 352 பேருக்கும், சேலத்தில் 261 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 222 பேருக்கும், கன்னியாகுமரியில் 181 பேருக்கும், வேலூரில் 180 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

நேற்று மட்டும் சென்னையில் 19 பேரும், சேலத்தில் 8 பேரும், தேனியில் 7 பேரும், வேலூரில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், செங்கல்பட்டு, திருநெல்வேலியில் தலா 4 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, விருதுநகரில் தலா 3 பேரும், கோவை, கடலூர், ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருப்பத்தூரில் தலா ஒருவரும் என 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 சென்னையில் கொரோனா தொற்று சமீபத்தில் சில நாட்களாக மேலாக தினசரி தொற்று 1,200க்குள் பதிவாகி வந்த நிலையில் இன்று 1,298 பதிவாகி உள்ளது.

வீடியோ செய்திகள்