jeevan-works-logo
booked.net
சோனியா விலகல்.. ராகுல் மறுப்பு.. காங்கிரஸ் கட்சியின் தலைவர்தான் யார்? மேலும் பலவீனமாகும் கட்சி...

Published: Monday, Aug 24,2020 ,07:45:11am

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து  சோனியா காந்தி  விலக  முடிவு செய்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

கட்சியின் அமைப்புகளை முழுமையாக மாற்றியமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இந்தகடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள சோனியா காந்தி,  அனைவரும் கூட்டாக புதிய தலைவரை தேர்வு செய்வோம் எனவும் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க தான் விரும்பவில்லை எனக் கூறியிருப்பதாகவும் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தையடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.  மேலும், காங்கிரஸ் தலைவர் பதவியை தற்போதைக்கு ஏற்கப் போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அல்லது ஏ.கே. அந்தோணியை இடைக்கால தலைவராக்கலாம் என்கிற யோசனையையும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாராம். 

ஆளும் கட்சி என்றைக்குமே வலுவாகத்தான் செயல்படும். ஆனால், ஆட்சியில் இல்லாதபோதும் எதிர்கட்சியானது ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.. அந்த அளவிற்கு அதற்கு பலம் இருக்க வேண்டும். அப்போதுதான், ஆளும் அரசு முறையாக தன் கடமையை செய்யும். 

பலவீனமான எதிர்கட்சி என்பது அந்த கட்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையே பாதிக்கக்கூடியது. 

 

வீடியோ செய்திகள்