தனது ஐபிஎஸ் வேலையை விட்டு விலகி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த கரூரைச் சேர்ந்த அண்ணாமலை நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவர் ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று பேசப்பட்டு வந்தது.
பாஜகவை தேர்ந்தெடுத்தது ஏன் என விளக்கமளித்துள்ள அவர் ‘நாடு, தேசம் என நாட்டின் மீது அக்கறை கொண்டவன் நான். அதனால்தான் ஐபிஎஸ் ஆனேன். தற்போது தமிழக அரசியலில் ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது, அதை பாஜகவால் மட்டுமே தர இயலும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.