jeevan-works-logo
booked.net
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொரோனா கால கட்டுப்பாடுகள்.! கவனமாக இருங்கள் பிள்ளைகளே..!!

Published: Wednesday, Aug 26,2020 ,07:30:13am

செப்டம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை எழுதுவதற்காக, நாடு முழுவதிலும் இருந்து 16 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். மாணவர்கள் தனி தனி இருக்கையில் அமர வைக்கப்படுவார்கள். ஒரு பெஞ்சில் ஒருவர் மட்டுமே அமர வைக்கப்படுவார். தேர்வு எழுதும் அறையில் ஒரு அறைக்கு 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மாணவர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.மாணவர்கள் எல்லோரும் தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைசர் கொண்டு வரவேண்டும். 

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதிய நிலையில், நடப்பு ஆண்டில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுத உள்ளனர். 

கொரோனா காரணமாக இந்த எண்ணிக்கை குறைவு ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு கார்ணங்கள் உள்ளனவா என்பது தெள்வாகவில்லை.

வீடியோ செய்திகள்