தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மீண்டும் 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3,91,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 107 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் 42 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 65 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 6998 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 3,32,454 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசு அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தும் திட்டத்தில் இருந்து வருகிறது.
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறந்ததன் மூலம் என்ன பாதிப்புகள் நேரிட்டது என்பது இன்னும் சில நாட்கள் கழித்தே தெரியும்.