jeevan-works-logo
booked.net
ரத்து செய்யமுடியாது!! இ பாஸ் கொடுத்தால் தான், தொற்று ஏற்பட்டால் தொடர்புகளை கண்டுபிடிக்க முடியும்.. முதல்வர் விளக்கம்!!

Published: Friday, Aug 28,2020 ,06:52:13am

நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது, தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுவதன் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நாட்டிலேயே, தமிழ்நாட்டில்தான் குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசால் முழு மூச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை, தனிக்கவனம் செலுத்தப்பட்டு, இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை குணமடையச் செய்யும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பரவலை தடுக்க அரசு சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசித்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இ-பாஸ் கொடுத்தால் தான், தொற்று பரவல் ஏற்படும் சூழலில் அவர்களது தொடர்பை கண்டுபிடிக்க முடியும். இல்லையெனில் கண்டுபிடிக்க முடியாது. அதற்காகத்தான் இந்த நடைமுறை.

கேட்கிற அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பொறுப்புணர்வோடு அத்தியாவசிய பணிக்காக மட்டுமே செல்ல வேண்டும். ஏனென்றால், இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. கொடிய நோய் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. மக்களை பாதுகாக்க வேண்டும் என்றுதான் இந்த கட்டுப்பாடு உள்ளது.

- என்று தெரிவித்திருந்தார்.

வீடியோ செய்திகள்