jeevan-works-logo
booked.net
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு நாடெங்கும் வலுக்கும் எதிர்ப்பு!! தலைவர்கள் கண்டனம்....

Published: Friday, Aug 28,2020 ,06:54:59am

அரசின் தற்போதைய முடிவின்படி ஜேஇஇ தேர்வு, வரும் செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்காக, நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வுகளின் தேதியை தள்ளிவைக்க உச்ச நீதிமன்றத்தில்  பல மாணவர்கள் தரப்பு முறயிட்டபோதும், அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாததால் இந்த விவகாரத்தில் அரசே முடிவெடுக்கலாம் என்று கூறி விட்டது.

இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ள டிவிட்டர் தகவலில், 11 முதல்வர்கள் நீட், ஜேஇஇ தேர்வுகளை எதிர்க்கிறார்கள் என்றால், ஏன் அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை? முதல்வர்களுக்கு அதிகாரம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"நாங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்குக் கடிதம் கொடுத்துள்ளோம். அவர் தான் இதை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு‌ அவரிடம் தான் இருக்கிறது," என்று கூறினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், தமிழக முதல்வரின் இந்த விளக்கம் சம்பிரதாமயானது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், தன் முடிவுகளால் அரசு இன்றைய தலைமுறையை அலட்சியப் படுத்துவது என்பதே கடும் விமர்சனத்துக்குரிய தவறு. நாளையை ஆளப்போகும் மாணவர்களின் மனநிலை புரியாமல், முடிவுகள் எடுப்பது மன்னிக்க முடியாத குற்றம். நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்

வீடியோ செய்திகள்