jeevan-works-logo
booked.net
வசந்த் அன் கோ வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார்... தலைவர்கள் இரங்கல்:: இன்று இறுதிச்சடங்கு..

Published: Saturday, Aug 29,2020 ,08:40:20am

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார்.

இன்று அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. 

 'வசந்த் அன் கோ' நிறுவனத்தை உருவாக்கி அதன் சேர்மனாகவும் இருந்தார். இந்த நிறுவனத்திற்கு  நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. 'வசந்த் டி.வி' யின் நிறுவனரான இவர் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வந்தார்.

இவர், தமிழ்நாடு காங். கமிட்டி செயல் தலைவராகவும் இருந்தார்.இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார்.

கொரோனோ தொற்றால் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் மறைந்தது அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் கொள்கைகள் மீது அவர் கொண்ட அர்ப்பணிப்பு என்றும் நமது இதயத்தை விட்டு மறையாது என்று  ராகுல்காந்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எம்.பி., வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரின் மறைவு காங்., கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு. பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களின் அன்பை பெற்றவர். வாழ்கை பயணத்தை விற்பனையாளராக தொடங்கி, கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் என்று முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வீடியோ செய்திகள்