jeevan-works-logo
booked.net
அனைத்து தளர்வுகளும் அறிவிப்பு.. கூடவே 144ம் தொடரும்... புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்வுகளும்!!

Published: Monday, Aug 31,2020 ,08:10:01am

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற்து. இந்திய முழுவதும் இருக்கும் 7ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. 

மத்திய அரசு நேற்று முன்தினம் 4-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது. அப்போது, மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 தமிழக அரசு சார்பாக புதிய தளர்வுகளை அறிவித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31-8-2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-9-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1-9-2020 (நாளை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பொதுமக்கள் இ-பாஸ் இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

*வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் மற்றும் இதர வாகனங்கள் வழியாக தமிழகத்துக்கு வர இ-பாஸ் நடைமுறை தொடரும்.

*ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்த அனைவருக்கும் Auto-generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாகப் பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.

* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.

* மாவட்டத்துக்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகரப் பேருந்துப் போக்குவரத்து சேவை 1.09.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 7.9.2020 முதல் செயல்பட அனுமதி.

* வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி. குளிர்சாதன வசதி குறித்து கட்டுப்பாடுகள் தொடரும். 

* சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.

* தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. பார்சல் சேவை 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

* தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

* வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

* மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் இயங்கும். 

*பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடத் தடை.

* நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதத் தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்.

* பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கத் தடை.

* திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் செயல்பட அனுமதி இல்லை. 

*பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்