முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அவர் கோமா நிலைக்குச் சென்றார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
இவருக்கு அபிஜித், இந்திரஜித் என்ற இரண்டு மகன்களும், சர்மிஸ்தா என்ற மகளும் உள்ளனர். மனைவி, சுவ்ரா முகர்ஜி கடந்த 2015 ல் காலமாகிவிட்டார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று (ஆக.31 முதல் செப். 6-ம் தேதி வரை ) 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.