jeevan-works-logo
booked.net
மீண்டும் அத்து மீறிய சீனா..!! முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம்... எல்லையில் பதட்டம்... !!

Published: Tuesday, Sep 01,2020 ,07:45:45am

மீண்டும் லடாக் எல்லையில், பாங்காக் சோ ஏரி பகுதியில் சீனப் படையினர் கடந்த 29ம் தேதி இரவு அத்துமீறி நுழைய முயன்றதாகவும், அந்த முயற்சியை முறியடித்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

ராணுவ செய்தி தொடர்பாளர் அமன் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “பாங்காக் சோ ஏரியின் தென்கரையில் ஏற்கனவே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏரியின் வடகரையில் கடந்த 29, 30ம் தேதி இரவு அத்துமீறி ஊடுருவிய சீனப் படையினர் ஏற்கனவே இருக்கும் நிலைகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்." 

"இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ள நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில், சீன ராணுவம் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனை முறியடித்த இந்திய ராணுவம் தனது நிலைகளை வலுப்படுத்தி வருகிறது. பேச்சுவார்த்தையின் மூலம் எல்லையில் அமைதியை பராமரிக்க விரும்பும் இந்தியா தனது எல்லைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.” என்று கூறியுள்ளார். 

வீடியோ செய்திகள்