தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும் இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.