jeevan-works-logo
booked.net
செப்டம்பர் 7 ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள்!! சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து..!!

Published: Friday, Sep 04,2020 ,07:56:13am

சென்னை சென்டிரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை - மதுரை, சென்னை -  கோவை,  சென்னை - குமரி, சென்னை - தூத்துக்குடி, சென்னை - மேட்டுப்பாளையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை - மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை - கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

வீடியோ செய்திகள்