jeevan-works-logo
booked.net
வங்கிக்கடனுக்கான வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது மத்திய அரசு திட்டவட்டம்.. வழக்கு ஒத்திவைப்பு..!!

Published: Friday, Sep 04,2020 ,07:58:05am

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களின் மாதத் தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அதை ரத்து செய்ய கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தது. 

மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டபோது, வங்கிக்கடனுக்கான வட்டிக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை வலுவிலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது. எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறையின் பாதிப்பும் வெவ்வேறாக உள்ளது. ஆக.,31 வரை கடன் தவணை செலுத்தாதவர்களின் கணக்குகள் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது... இவ்வாறு அவர் வாதிட்டார்.

“கொரோனா காலத்தில் எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கித் துறை, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. அதை வலுவிழக்கச் செய்யக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதே வேளையில் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கடன் வட்டியை தள்ளுபடி செய்வதில்லை; வங்கிக் கடன்களை செலுத்துவதில் சில தளர்வுகள் அளிக்கவும், விவசாய கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு தவணை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன்களுக்கான தவணைமீது அவகாசம் அளிப்பதன் நோக்கம் வட்டியை தள்ளுபடி செய்வதல்ல. கடன்களை செலுத்த வேண்டிய காலத்தை தள்ளிவைப்பதே நோக்கம்” என கூறினார்.

“வரும் 6-ந் தேதி நிபுணர்கள் குழு துறை ரீதியான வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்கிறது. மேலும் 2020 பிப்ரவரி 1-ந் தேதி முதல் கடன் தவணை கட்டுவதில் பிரச்சினை உள்ளவர்கள் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ஆனால் கடந்த டிசம்பர் முதல் தவணை கட்ட தவறியவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடையாது” என கூறினார்.

உடனே நீதிபதிகள், “கொரோனா காலத்துக்கு முன்பு ஒருவருக்கு கடன் தவணை கட்டுவதில் பிரச்சினை என்றால் அவருக்கு கொரோனா காலத்தில் மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாதா?” என கேட்டனர். .

நீதிபதிகள், ஆகஸ்ட் 31-ந் தேதி வரை கடன் தொகையை கட்டாத கணக்குகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்க கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வீடியோ செய்திகள்