2012-ஆம் அண்டு முதல் 2017-ஆம் ஆண்டு முதல் பொறியியல் இறுதியாண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் அரியர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி செமஸ்டரில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் 15-ஆம் தேதி துவங்கி 17-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என தமிழக அரசு முன்னமே அறிவித்திருந்தது.