jeevan-works-logo
booked.net
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! சென்னைக்கு மழை உண்டா?!

Published: Monday, Sep 14,2020 ,07:39:31am

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.  இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும்.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 17 வரை பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  செப்டம்பர் 15 வரை தென் கிழக்கு, மத்தியகிழக்கு அரபிக் கடலை ஒட்டியுள்ள கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

இன்று 14-ம் தேதி தென்மேற்கு, மத்தியமேற்கு வங்க கடலை ஒட்டியுள்ள வட தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வீடியோ செய்திகள்