jeevan-works-logo
booked.net
இந்தியன் 2 வில் மேக்கப் இல்லாமல் நடிக்கப்போகும் கமல்!!

Published: Monday, Jul 01,2019 ,

இயக்குனர் சங்கரின் தரமான வெற்றி படைப்பான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக ஆரம்பமானது.  படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. ஏதேதோ காரணம் எல்லாம் சொன்னார்கள். ஆனால் லைகாவிற்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையிலான  பிரச்சனைதான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

 இந்தியன் 2,  இம்சை அரசன் 24ஆம் புலிகேசி  என்று வரிசையாக லைக்காவுக்கும் ஷங்கருக்கும் முட்டல் மோதல் ஆகவே இருந்து வருகிறது. 

 வெறுத்துப்போன சங்கர் இந்த இரண்டு படங்களையும் தலைமுழுகிவிட்டு விஜய் நடிக்கும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

 இப்படியே இழுத்துக்கொண்டு போனால்  இந்தியன் 2 வில் நடிக்க கமலுக்கு மேக்கப் போட தேவையிருக்காது என்று சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கமுக்கமாக காதைக்கடிக்கிறார்கள். 

வீடியோ செய்திகள்