jeevan-works-logo
booked.net
ராக்கிங் பிரியர்களுக்கு அரசு வைக்கும் ஆப்பு!!

அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ராகிங் நடவடிக்கைகளை முழுமையாக தடுக்கும் பொருட்டு பல்கலைக்கழக மானியக் குழு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. 

இந்த அறிவிப்பில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் ராக்கிங் தடுப்பு குழு மற்றும் ராகிங் தடுப்பு படை அமைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்பு இருந்தது போன்று வழவழா கொழகொழா என்ற தண்டனைகள் இல்லாமல் ராக்கிங்  செய்தால் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதையும் மாணவர்களிடையே பிரசுரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ராகிங் தடுப்பு குழு மற்றும் தடுப்பு படையில்  இடம்பெற்றுள்ளவர்கள் அது விவரங்களை கல்லூரி மற்றும் பல்கலைக் கழக இணையதளங்களில் வெளியிட வேண்டும். 

ராகிங் தடுப்பு குழு,  மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 இது போதாதென்று பல்கலைக்கழக மானியக் குழு விடமே மாணவர்கள் நேரடியாக ராகிங் புகார்களை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ராகிங் குறித்த புகார்களை கீழ்காணும் இணைய தளங்களில் நேரடியாக பதிவிடலாம்.

www.ugc.ac.in

www.antiragging.in

 

helpline@antiragging.in என்ற இமெயிலுக்கும் நேரடியாக புகார்களை அனுப்பலாம்.

 1800- 180-  5522

09871170303

09818400116  என்ற போன் நம்பர் களிலும் நேரடியாக புகார்களை தெரிவிக்கலாம். 

 எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால் ராகிங்கை முற்றிலுமாக தடுப்பதற்கான முனைப்போடு அரசு இருப்பது தெரிய வருகிறது.

வீடியோ செய்திகள்