jeevan-works-logo
booked.net
பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு குறித்த தகவல்கள்.

பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்த கலந்தாய்வு ஜூலை மூன்றாம் தேதி தொடங்குகிறது.  கலந்தாய்வில் கலந்துகொள்ளும் முன்பு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் எவை எவை என்பதை முறையாக தயார் செய்துகொள்வது நல்லது.

ஒரு மாணவர் எத்தனை கல்லூரிகள் மற்றும் எத்தனை பாடப் பிரிவுகளை வேண்டுமானாலும் விருப்பப் பட்டியலில் கொடுக்கலாம். அதே போல ஒரே கல்லூரியில் வெவ்வேறு பாடப்பிரிவில் படிக்க விரும்பினாலும் அதற்கு ஏற்றவாறு பட்டியலை கொடுக்க வேண்டும். பட்டியலை சமர்ப்பித்த பிறகு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு அந்த விருப்பப்படி விலை இறுதி செய்ய வேண்டும். 

மார்க்க குறையக் குறைய ராங்க் ஜாஸ்தியாக ஆக நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.  ஒவ்வொருவரும் குறைந்தது ஐம்பதிலிருந்து அறுபது சாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பது கல்வியாளர்கள் கருத்து. 

அடுத்த இரண்டு நாட்களில் மாணவர்கள் கொடுத்த பட்டியலில் இருந்து அவர்களின் தரவரிசை எண்ணிக்கை ஏற்ப கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும் அப்போது மாணவர்கள் கொடுக்கப்பட்ட கல்லூரியை மாணவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால்,  படிவத்தை தரவிரக்கம் செய்து கல்லூரியில் சேர்ந்து விடலாம்.

 ஒதுக்கப்பட்ட கல்லூரி அங்கீகாரம் பெற்றதா என்பதை தெரிந்து கொள்ள கீழ்காணும் இணைய தளத்தை அணுகுங்கள்.

www.tneaonline.in

கல்லூரி விரும்பும் பட்டியல் தயாரிப்பது குறித்தும் கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து வழிகாட்டுதலும் இந்த இணைய தளத்தில் கிடைக்கின்றன. 

தேசிய தரச்சான்றிதழ் பெற்ற கல்லூரியில் படித்தால் மட்டுமே கல்விக் கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்படும் என்று அரசு இந்த ஆண்டிலிருந்து அறிவித்துள்ளது.  மாணவர்களும் பெற்றோர்களும் தேசிய தரச்சான்றிதழ் பெற்ற கல்லூரியா என்பதை என்பது குறித்து கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவரும் பெற்றோரும் சம்பத்தப்பட்ட கல்லூரியை ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிட்டு வருவது மிகுந்த நலம் பயக்கும். கல்லூரியில் படிக்கும் பழைய மாணவர்களும் கலந்துரையாடி அந்த கல்லூரி பற்றி தெரிந்து கொள்வது நல்லது 

கலந்தாய்வு குறித்த சந்தேகங்களுக்கு கீழ்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

044-22359901, 22359902

மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

வீடியோ செய்திகள்