அனைத்து தண்ணீர் லாரிகளும் உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்ற அமர்வு, வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை வர்த்தக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இது குறித்து நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எல் சந்திரகுமாரின் நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வர்த்தக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீரை எடுத்து விற்ற லாரிகளின் விபரங்களை தாக்கல் செய்ய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் அனைத்து தண்ணீர் லாரிகளும்உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம் என அறிவிப்பானை வெளியிடவும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை ஜூலை 16ம் தேதிக்கு தள்ளி வைத்து இருக்கின்றனர்.