jeevan-works-logo
booked.net
விஏஓக்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தான் தங்கி இருக்க வேண்டும். மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

பணியிடத்தை விட்டு வெளியே செல்வதற்கான விதியை மீறும் விஏஓக்கள் மீது புகார்களை விசாரிக்க அதிகாரிகளை நியமிக்க மதுரை உயர் நீதிமன்றம்  அரசுக்கு உத்தரவிட்டுள்ளது!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த சிவகுருநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தங்கள் கிராமத்தின் விஏஓ விதியை மீறி வெளியூரில் தங்கி அன்றாடம் வந்து செல்வதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் விஏஓக்கள் பணியிடத்தை விட்டு வெளியே செல்ல அவர்கள் பணிபுரியும் தாலுகா வட்டாட்சியரிடம் உரிய அனுமதியை பெற வேண்டும் என்பது விதி என்று தெரிவித்திருந்தார். 

 நகரங்களில் பிரச்சனை இல்லை விஏஓக்கள் அங்கே தான் இருக்கின்றார்கள். ஆனால் கிராமங்களில் பறவைகள் வெளியிலிருந்துதான் வந்து செல்வதாக செய்கிறது இது குறித்து விரிவான ஆய்வு நடத்தி,  தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வீடியோ செய்திகள்