jeevan-works-logo
booked.net
பெங்களூர் வாசிகளே கொஞ்சம் கவனியுங்கள்.. அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தடை வருகிறது!!

தண்ணீர் பஞ்சம் தீரும் வரை பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடங்கள்  கட்ட தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, குடிநீர் இருக்கின்றதா என்பதை ஆராயாமலே கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி விற்பனை செய்கின்றன என்று குற்றம் சாட்டினார்.

 ஒரே இடத்தில் பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டிய பிறகு அத்தனை குடியிருப்புகளுக்கும் குடிநீர் கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு வந்து சேர்கிறது என்று தெரிவித்தார் .

இன்னும் 5 ஆண்டுகளில் ஷராவதி நீர் ஆதாரங்களில் இருந்து பெங்களூருவுக்கு குடிநீர் கொண்டுவரப்படும் என்றும் அதன்பிறகு பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார் 

ஆகையால் என்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் இதுகுறித்து கட்டுமான நிறுவனங்கள் உடன் கலந்துரையாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ செய்திகள்