jeevan-works-logo
booked.net
பேருந்தில் திடீரென பிரேக் போடுவது போல சென்னையில் ஒரு திடீர் வேலை நிறுத்தம்!

Published: Tuesday, Jul 02,2019 ,

சென்னையில் திங்கட்கிழமை காலை எதிர்பாராத விதமாக திடீரென மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  பனியில் இருந்து பேருந்துகளை எடுக்கப்படவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். 

 சென்னை முழுவதும் அனைத்து பகுதிகளிலும்  மாநகர பேருந்துகளை நம்பி இருந்தவர்கள் வேறு வழியின்றி தேங்கி நின்றனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அலுவலகம் செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இதுதான் சாக்கு என்று ஷேர் ஆட்டோக்களும் ஆட்டோக்களும் கட்டணத்தை இரட்டிப்பாகவும்  மும்மடங்காகவும் உயர்த்தி விட்டனர். முன் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தம் என்பதால் பொதுமக்களும்  தயாராக இல்லை. 

போக்குவரத்து துறை ஊழியர்களை கேட்டால் ஜூன் மாத ஊழியத்தை வழங்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது,  வழக்கமாக மாத இறுதி நாளில் ஊதியம் வழங்கப்பட்டு விடுவதாகவும் இம்மாதம் வார இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிப் போனதால் ஊதியம் வழங்குவதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தனர். 

உண்மையில் ஊதியம் வழங்குவது ஒரு நாள் தாமதமானது பிரச்சனை இல்லை.  இம்மாதம் முழுமையான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று ஊழியர்களுக்கு இடையில் நிலவிய வதந்தியே இதற்கு காரணம்.  எந்தவிதமான வதந்தியை நம்ப வேண்டாம் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். 

 எது எப்படியோ,  திடீர் திடீரென்று வேலைநிறுத்தத்தில் இறங்குவது யாருக்கும் எந்த வகையிலும் நன்மை பயக்க போவதில்லை. இன்னொரு நாள் போக்குவரத்து துறை ஊழியர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் போதும் பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பையும் எதிர்பார்க்க இயலாது.  பொதுமக்களின் ஆதரவைப் பெறாத எந்த போராட்டமும் எந்த நாட்டிலும் எப்போதும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

வீடியோ செய்திகள்