jeevan-works-logo
booked.net
மழை மழை வேண்டி கர்நாடக இசை கச்சேரி!

பிரபல கர்நாடக கலைஞர்கள் உட்பட 150 பேர் பங்கு கொண்ட கர்நாடக இசை கச்சேரி சென்னை தி நகரில் உள்ள சிருங்கேரி மடத்தில் இன்று நடைபெற்றது.  சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்கள் கடும் வறட்சியை சந்தித்து வரும் இந்த சூழ்நிலையில் கர்நாடக இசைக் கலைஞர்கள் தங்களால் ஆன ஒரு முயற்சியாக கச்சேரியை நிகழ்த்தியுள்ளனர்.

சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, பாம்பே சகோதரிகள்  போன்ற பிரபல கலைஞர்கள் இதில் பங்கு பெற்றனர். அமிர்தவர்ஷினி கேதாரம் ஆனந்தபைரவி உள்ளிட்ட ராகங்களை பாடினார்.  இந்த ரகங்கள் அனைத்தும் மழை பொழிவதற்கான ராகங்கள் என்று இசை பெருமக்களால் குறிப்பிடப் பட்டவை ஆகும். 

காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வீடியோ செய்திகள்