jeevan-works-logo
booked.net
ஹிந்தியெல்லாம் திணிக்க மாட்டோம்! பயப்படாமல் இருங்கள் அமைச்சர் செங்கோட்டையன்.

Published: Tuesday, Jul 02,2019 ,

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜன் எழுப்பிய  கேள்வியில் அரசு கொண்டு வந்திருக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையில் தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவதாக ஹிந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்ற மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவதாக உள்ளது. இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அளித்த பதில் - தமிழக அரசு தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையிலேயே உறுதியாக இருக்கிறது. எந்தக் காலத்திலும் இந்த இருமொழிக் கொள்கையை சமரசம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை

. மேலும் ஹிந்தி போன்ற ஒரு மூன்றாவது மொழியை நமது மாணவர்களுக்கு புதிதாக கற்பிக்கும் போது அது வீண் சுமையை ஏற்படுத்தும் என்பதையும் அரசு உணர்ந்து உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

இவர்கள் இதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கட்டும்.  நாம் நம் பிள்ளைகளுக்கு தேவைப்படும் என்று தோன்றும் மொழிகளை கற்றுக் கொடுப்போம். தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழர் வாழ்வின் மேன்மையையும் நம் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவோம். முதலில் தமிழர்களுக்குள்ளே தமிழில் உரையாடுவோம்.

வீடியோ செய்திகள்