jeevan-works-logo
booked.net
அடுத்து ஒரு அரசியல் தாவல்! அமமுக வில் இருந்து அதிமுகவிற்கு :: இதற்கு அந்த மூட்டை குடோவின்லயே இருந்திருக்கலாம்…

Published: Tuesday, Jul 02,2019 ,

முன்னாள் சட்டத்துறை அமைச்சரான இசக்கி சுப்பையா அமமுக வில் இருந்து விலகி விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இசக்கி சுப்பையா அமமுக  வின் மாநில அம்மா பேரவையின் இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். 

 அமமுக வில் இருந்து விலகுபவர்கள் வழக்கமாக திமுகவில் சென்று சேரும் காட்சிகளைத்தான் பார்த்து வருகிறோம்.  புதுவிதமாக இசக்கி சுப்பையா அதிமுக வில் சென்று சேர்கிறார்.  

இது ஏன் என்பதற்கு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை.  பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாக சுப்பையா அரசியலில் இருப்பதே அவற்றையெல்லாம் காப்பாற்றிக் கொள்ளத்தான் என்ற ஒரு பேச்சு உண்டு.  இப்பொழுது அமமுக வின் தலைமை அலுவலகம் இசக்கி சுப்பையா உடையதுதான். 

 இசக்கி சுப்பையா மறுத்தும் கேட்காமல்  தென்சென்னை தொகுதியை ஒதுக்கி, அவர் தோற்றுப் போனார்.   அப்போதிலிருந்து இவருக்கும் தினகரனுக்கும் ஒத்துவரவில்லை.  மேலும் சில சம்பவங்கள் மூலம் இந்த மோதல் பெரிதாகவும், இப்பொழுது தாய் கழகத்திற்கு செல்வதாக அறிவித்துள்ளார். 

 இன்னும் இது போன்ற பல நாடகங்களை நம் அரசியல் அரங்கில் பார்க்கத்தானே போகிறோம். 

வீடியோ செய்திகள்