jeevan-works-logo
booked.net
பிஎஸ்என்எல் முதலிடம்!! அதிக இழப்பை சந்தித்த பொதுத்துறை நிறுவனமாக சாதனை!!

 2018 19 நிதியாண்டில் மொத்தம் 13 ஆயிரத்து 804 கோடி ரூபாயை    இழந்து நாட்டிலேயே அதிக இழப்பை சந்தித்த பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் புதிய சாதனையை படைத்துள்ளது.  இதற்கு அடுத்த இடத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனம் உள்ளது. 

 தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட நிதி இல்லாத நிலையை பிஎஸ்என்எல் எட்டியுள்ளது.  உடனடி நிதி உதவி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. 

 பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்  நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இவ்விரு நிறுவனங்களுக்கும் 74,000 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

வி ஆர் எஸ் பெற்றுக்கொண்டு ஓய்வு பெறுவோருக்கு பணி பலன்களை வழங்க மட்டுமே 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட உள்ளதாக தெரிகிறது.  விஆர்எஸ் பெருவதை ஊக்குவிக்க அந்த ஊழியர்களுக்கு 5 விழுக்காடு கூடுதல் இழப்பீடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

 தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும்,  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் செய்யும் செலவை விட ஊழியர்களை பராமரிப்பதற்கே  இந்த பொதுத்துறை நிறுவனங்கள் தனது வருவாயில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. அந்த ஊழியர்களும் மேலும் மேலும் சலுகைகளையும்,  ஊதிய உயர்வையும் போராடி பெற்றுக் கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு குருவி தலையில் பனங்காயை வைத்தது போல மொத்த நிறுவனமும் சரிந்து விடுகிறது. அப்பொழுதும் அரசு மக்களது வரிப்பணத்தை வாரி வழங்கி அந்த ஊழியர்களுக்கு எவ்வளவு சலுகைகளை கொடுத்து பணி ஓய்வு பெறச் செய்ய முடியுமோ அவ்வளவு வேலைகளையும் செய்து விடுகிறது.  இவ்வளவு அட்டூழியங்களுக்கு பிறகும் நிறுவனம் சிறப்பாக செயல்படும் என்றால் அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது. அது வழக்கம் போல மொக்கையாகவே தான் இருக்கும். யார் கேட்கப் போகிறார்கள்?!

வீடியோ செய்திகள்