jeevan-works-logo
booked.net
பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் மாடர்ன் உருவம்! வெடித்தது சர்ச்சை!!

தன் வாழ்நாள் முழுவதும் மதுவிற்கும் மாமிசத்திற்கும் எதிராக குரல் கொடுத்து வந்த மகாத்மா  காந்தியின் படம் இன்று ஒரு பீர் பாட்டிலில் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

 இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மக்கா பிரிவரி  என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் இஸ்ரேல் நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி  இந்த பீர் பாட்டிலை வெளியிட்டுள்ளது.

அதுவும் எப்படி என்கிறீர்கள்,  காந்திக்கு கூலிங்கிளாஸ் மாட்டி,  கோட் சூட் எல்லாம் போட்டு மாடர்னாக பதிவிட்டிருக்கிறார்கள்.  இது கண்டு வேதனையடைந்த இஸ்ரேல் நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள்,  கேரளாவில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய அமைப்பிற்கு தகவல் அளித்திருக்கிறார்கள். 

 இந்த அமைப்பின் தலைவரான எபி ஜோஸ்  என்பவர் இந்திய பிரதமருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இந்த பிரச்சினை குறித்து கடிதம் எழுதியிருக்கிறார். காந்தியின் படத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும்,  சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

சர்ச்சைகளை வைத்து விளம்பரம் தேடுவது ஒரு மோசமான போக்கு.  விளம்பர வெறி ஒரு நாட்டின் உணர்வு பூர்வமான விஷயங்களை கூட கொச்சை படுத்தி வேடிக்கை பார்க்கிறது. 

வீடியோ செய்திகள்