jeevan-works-logo
booked.net
எந்த தகவலையும் நாங்கள் சீனாவுடன் பகிர்வதில்லை..டிக் டாக் திட்டவட்டம்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் லோக்சபாவில் பேசும்போது டிக் டாக் செயலி குறித்து ஒரு சர்ச்சையை எழுப்பியிருந்தார்.  சீன நிறுவனமான டிக் டாக் இந்தியர்களுடைய தகவல்களைத் திரட்டி சீனாவிற்கு அனுப்பி விடுவதாக அவர் கூறியிருந்தார். 

 இதற்கு மறுப்பு தெரிவித்த டிக் டாக்  நிறுவனம் இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும்,  எங்கள் நிறுவன பயனாளர்களது பாதுகாப்பு எங்களது தலையாய கடமை என்றும் தெரிவித்துள்ளது.  நாங்கள் எந்த நாட்டில் செயல்பட்டாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 இந்தியாவில் சக்கை போடு போடும் டிக் டாக் உண்மையில் சீனாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.  மேலும் அது எந்த சீன நிறுவனம் உடனும் பார்ட்னர்ஷிப்பில் இல்லை. இந்தியாவில் 200 மில்லியன் பயனாளர்கள் டிக் டாக்  செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

 எங்கள் சந்தேகம் எல்லாம்  டிக் டாக் செயலியை பயன்படுத்தி பைத்தியக்காரத்தனமாக ஆடியும் பாடியும் வரும் இந்த அரை லூசுகளின்  தகவல்களைத் திரட்டி சீனாவும்தான் என்ன செய்யப் என்ன செய்துவிடப் போகிறது!? விடுங்கள் சசி தரூர்...

வீடியோ செய்திகள்