jeevan-works-logo
booked.net
12 ராசிகளுக்குமான தின பலன்: [12.07.2019] பாக்கெட்டில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்து செயல்படவேண்டிய ராசி எது?

Published: Friday, Jul 12,2019 ,11:08:30am

மேடம்:

கடும் உழைப்பின் மூலம் நற்பலன்களை  அடையும் நாள் இது. தேவையுள்ளோர் தங்களை அணுகி உதவி பெற்றுக் கொள்வார்கள்.  அவர்களுக்கு தேவையான உதவியை மனநிறைவோடு செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்:  1 6 9

ரிஷபம்:

 இன்று உங்கள் எதிரிகள் பலம் குறைந்து காணப்படுவார்கள்.  வீடு வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். மன அழுத்தம் குறையும்.  எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். தெளிவான நாளிது. அதிர்ஷ்ட நிறம் நீலம் வெள்ளை.  அதிர்ஷ்ட எண்கள் 2 9.

மிதுனம் :

 சகோதர சகோதரிகள்,  நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.  சாதுக்கள், முனிவர்கள் போன்றவர்கள் சந்திக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்,  அறிவுடையோர் நட்பை பெறுவீர்கள். புதிய செல்போன், பைக், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் யோகம் இன்று உண்டு.  அதிர்ஷ்ட நிறம் பச்சை வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள் 5 9.

கடகம் : 

 கடன் வசூலாகும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும்.  மருத்துவச் செலவுகள் குறையும். மனதில் நிம்மதி ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள்  இன்று ஒரு முடிவு காணும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நீலம். அதிர்ஷ்ட எண்கள் 1 7.

சிம்மம்: 

வந்த பொருட்களை திரும்பப் பெறுவீர்கள்.  நல்ல நட்பை பெறுவீர்கள். போலியான நண்பர்களது உண்மையான முகங்களை இன்று காணும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.  இடமாற்றம், வேலை மாற்றம் குறித்து இன்று ஒரு முடிவுக்கு வருவீர்கள். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் பச்சை. அதிர்ஷ்ட எண்கள் 1 5

கன்னி: 

 உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.  உடன் இருப்பவர்கள் அது உதவியால் உங்கள் வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்.  பதவி உயர்வு குறித்த பேச்சுக்கள் காதில் விழும். சரியான செயல்பாடுகள் மூலம் எதிர்கால முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை இன்று நீங்கள் பெறலாம்.  அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நீலம். அதிர்ஷ்ட எண்கள் 5 7.

துலாம்: 

 பணிபுரியும் இடத்தில் போட்டி பொறாமை நிலவும்.  திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இன்று பெறக்கூடும்.  மேலதிகாரி உங்கள் முன்னேற்றம் குறித்து நல்ல ஆலோசனைகளை வழங்குவார்.  தேவையில்லாத பிரச்சினைகளில் இன்று தலையிடாமல் இருத்தல் நன்று. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நீலம்.  அதிர்ஷ்ட எண்கள் 6 9.

விருச்சகம்: 

 வியாபாரம் வேலை இரண்டும் என்று பிரகாசமாக இருக்கும்.  கடன் பிரச்சினை இருப்பவர்கள் சரியான பதில்களை கூறி தவணை கேளுங்கள்.  இல்லையெனில் வீண் பிரச்சினைகளில் சிக்க வேண்டி இருக்கும். ஆரஞ்சு மஞ்சள்.  அதிர்ஷ்ட எண்கள் 1 5 9

தனுசு: 

நண்பர்கள்,  சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள்.  புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் ஏற்படும்.  உறவினர்கள் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்.  ஏதேனும் உதவி கேட்டால் தயங்காமல் செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நன்மையே.  அதிர்ஷ்ட நிறம் நீலம். அதிர்ஷ்ட எண்கள் 1 3

மகரம்: 

 கடன் பிரச்சினை களுக்கு பதில் சொல்லும் நிலை வரும்.  எதிர்காலம் குறித்த திட்டங்களை தீட்டுவீர்கள். வருமான வாய்ப்புகள் ஓரளவிற்கு இன்று வரும்.  அதிர்ஷ்ட நிறம் நீலம். அதிர்ஷ்ட எண் 5.

கும்பம்: 

 பாக்கெட்டில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வெளியில் கிளம்புங்கள்.  எதிர்பாராத செலவுகள் இன்று ஏற்படும். கடன் வசூலிக்க இன்று உகந்த நாள். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.  அதிர்ஷ்ட எண்கள் 2 9

மீனம்: 

 ஊரிலிருந்து உறவினர்கள் வருகை இருக்கும்.  கஷ்டங்களை மறைத்து அவர்களுக்கு முன்பு நன்றாக இருப்பதாக காட்டிக் கொள்வீர்கள்.  குழந்தைகளுக்கு வேண்டியதை செய்கிறீர்கள். உதவிக்கு செல்வதாக இருந்தால். மதியத்திற்கு பிறகு செல்லுங்கள்.  அதிர்ஷ்ட நிறம் நீலம் அதிர்ஷ்ட எண் 5 7.

வீடியோ செய்திகள்