jeevan-works-logo
booked.net
அரையிறுதியில் இந்தியா!! போராடி தோற்றது வங்கதேசம்.

Published: Wednesday, Jul 03,2019 ,

28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.  நேற்று நடந்த 40 வது லீக் போட்டியில் இந்திய வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  ரோகித் சர்மா , கேஎல் ராகுல் களம் இறங்கினர். ரோகித் சர்மா சதம் அடித்தார். இங்கிலாந்துடனான போட்டியில் டக் அவுட் ஆன ராகுல் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். 

வங்கதேச வீரர் சஹிப் உல் ஹசன்  அதற்குமேல் அடித்து அருமையாக விளையாடினார்.  சக்திக் பாண்டியா வீசிய பந்தில் சஹிப் உல் ஹசன்  கேட்ச் கொடுத்து அவுட்டானார். வங்கதேச ரசிகர்களுக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் இத்தோடு தகர்ந்து போனது. 

கடைசி வரை போராடிய வங்கதேச அணி 286 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

வீடியோ செய்திகள்