ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 18 பேர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா பேட்டை அருகே சின்ன கொட்டி கல்லு என்ற பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 20க்கு மேற்பட்டோர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் நான்கு பேர் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பக்ரா பேட்டை பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகளும் இதில் சம்பந்தப்பட்ட இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த செம்மரக் கடத்தல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத வரை அதிக கூலி ஆசைப்பட்டு நம் தமிழர்கள் கைதாவது தொடர்கதையாகி வரும்.