jeevan-works-logo
booked.net
மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம். மீண்டும் மீண்டும் தமிழகத்தை குறிவைக்கும் மத்திய அரசு..

 மேலும் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  தமிழகத்தில் அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வாங்கி உள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எண்ணெய் வளங்களை கண்டறியும் "திறந்த வழி அனுமதி கொள்கையின்" படி  ஹைட்ரோ கார்பன் வளங்களை ஒரே உரிமத்தின் மூலம் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் இந்தியா முழுவதும் உள்ள 54 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. 

 மீதமுள்ள இடங்களில் ஓஎன்ஜிசி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் பொருள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மொத்த 55 இடங்களில் மூன்று இடங்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன. அவற்றில் இரு இடங்களை வேதாந்தாவும் ஒரு இடத்தை ஓஎன்ஜிசி நிறுவனமும் உரிமம் பெற்று இருந்தது.

 இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அறிவிப்புக்குப் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலும் நான்கு கிணறுகளுக்கும், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 16 கிணறுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம் செய்வதை எவ்வளவு கடினமாக முடியுமோ அவ்வளவு கடினமாக்கி விட்டு,  விவசாயத்தை அழிக்கும் தொழில்களை எவ்வளவு வளர்க்க முடியுமோ அவ்வளவு வளர்த்துக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம்.

வீடியோ செய்திகள்