jeevan-works-logo
booked.net
பாகிஸ்தானில் உள்ள 500 வருட பழமையான குருத்வாரா இந்திய சீக்கியர்களுக்காக திறந்துவிடப்பட்டது!!

 பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் சியால்கோட் பகுதியில் உள்ள 500 வருட பழமையான குருத்வாரா இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.  

முன்னதாக  இந்தியர்கள் இந்த குருத்துவாராவில் அனுமதிக்கப்பட தடை இருந்து வந்தது.  இந்தியர்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தான், ஐரோப்பா, கனடா அமெரிக்கா பக்தர் தரிசனம் செய்ய இப்பொழுது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

 வருடம் தோறும் ஆயிரக்கணக்கான இந்திய சீக்கியர்கள்  குருநானக்கின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டுவிழாவின்போது  இந்த குருத்வாராவுக்கு விஜயின் செய்கின்றனர். 

 சீக்கியர்களின் மரபுப்படி குருநானக் சில்கோட்  பகுதிக்கு காஷ்மீரிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வாக்கில் விஜயம் செய்திருக்கிறார்.  சர்தார் சிங் என்பவர் குருநானக் விஜயம் செய்ததன் நினைவாக இந்த இடத்தில் ஒரு குருத்வாராவை எழுப்பி இருக்கிறார். 

 2018 நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இந்த புனித தளங்களை பார்வையிட பக்தர்கள் எல்லை கடந்து செல்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

வீடியோ செய்திகள்