jeevan-works-logo
booked.net
450 கோடி ரூபாய் அமேசான் பே நிறுவனத்தில் முதலீடு. அமேசான் நிறுவனம் அதிரடி.

 பேடிஎம், போன் பே,  கூகுள் ப்ளே போன்ற தனது போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக அமேசான் நிறுவனம் தனது அமேசான்  பே சேவைக்கு 450 கோடி ரூபாயை முதலீடாக அறிவித்துள்ளது. 

 டிஜிட்டல்  வர்த்தக சந்தையானது  இந்தியாவில் கடும் வளர்ச்சி அடைந்து வருகிறது.  வழக்கம்போல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த சேவையை தாராளமாக வழங்கி வருகின்றன.  இ-காமர்ஸ் துறையில் மிகப் பெரிய நிறுவனமாக விளங்கி வரும் அமேசான், டிஜிட்டல் வர்த்தகத்துறையில் அமேசான் பே  என்ற சேவையை வழங்கி வருகிறது. 

 இருப்பினும் அமேசான் பே இதே துறையில் இருக்கும் மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலேயே பயனர்களைக் கொண்டுள்ளது. 

இப்பொழுது ஒதுக்கப்பட்டிருக்கும் 450 கோடி ரூபாய் முதலீடு வாடிக்கையாளரை ஈர்ப்பதற்கான சலுகைகளை வாரி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ செய்திகள்