jeevan-works-logo
booked.net
மெட்ரோ ரயில்களில் இலவச பயண திட்டத்தை நிராகரித்தார் மெட்ரோ மேன் ஸ்ரீதரன்!!

டெல்லி   மெட்ரோ ரயில்களில்  பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு  முன்மொழிந்து இருந்தது. மெட்ரோ மேன் என்று அறியப்படும் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன தலைவராக இருந்த ஸ்ரீதரன் அவர்கள் இத்திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறார். 

 இத்திட்டத்தால் மெட்ரோ ரயில் நிறுவனம் நிதி தட்டுப்பாடுக்கும்,   நஷ்டத்திற்கும் உள்ளாக நேரிடும் என்று தெரிவித்திருக்கிறார். 

 பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்  எழுதியிருக்கும் கடிதத்தில் டெல்லி அரசு  பெண்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது எனில் அவர்களது பயணச் செலவை நேரடியாக மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு டெல்லி அரசை கட்டிவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீதரன் அவர்களது கருத்துக்கு ஆம் ஆத்மி அரசு  மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த இலவச திட்டத்தால் மெட்ரோ ரயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அது கூறியுள்ளது. 

 ஸ்ரீதரன் தனது கடிதத்தில் 2002 இல் டெல்லி மெட்ரோ சேவை தொடங்கப்பட்டபோது கட்டண சலுகை யாருக்கும் வழங்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.  முன்பு பிரதமராக இருந்த வாஜ்பாய் கூட டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் பொழுது டிக்கெட் வாங்கி தான் பயணம் செய்தாராம். 

 இந்த அரசுகள் எதற்காக  இலவசங்களை வழங்குவதில் இவ்வளவு முனைப்பு காட்டுகின்றன என்று புரியவில்லை.  வேலை வாய்ப்பு வழங்குங்கள், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள். நீங்கள் இலவசமாக கொடுத்து கிழிக்கும்  அனைத்தையும் மக்கள் நாங்கள் விலை கொடுத்து பெற்றுக் கொள்கிறோம்.

வீடியோ செய்திகள்