jeevan-works-logo
booked.net
வெகு சிலருக்கு உன்னைப் போன்ற தைரியம் உண்டு! ராகுல் காந்தி பற்றி பிரியங்கா ட்வீட்!!

தனது பதவி விலகலை உறுதி செய்த ராகுல் காந்திக்கு ட்விட்டர் மூலம் பிரியங்கா காந்தி எனது ஆறுதலை தெரிவித்திருக்கிறார். 

 வெகு சிலரே  உன்னைப் போன்று மன தைரியத்துடன் இருக்கின்றார்கள். உனது முடிவிற்கு எனது ஆழ்ந்த மரியாதை -  என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 49 வயதான ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக மே 25 அன்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.  அவரது ராஜினாமாவை ஏற்க இயலாது என்று காங்கிரஸ் அறிவித்தது. 

இன்று பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி தனது ராஜினாமாவை உறுதி செய்தார். காங்கிரஸ் கமிட்டி வெகுவிரைவில் தனக்கு பதிலாக வேறொருவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 அவரது கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,  இந்தியாவில் வலிமை வாய்ந்தவர்கள் அது வாரிசுகளை பதிவுகளை நியமிப்பது ஒரு பழக்கமாகிவிட்டது.  ஆனால் பதவிக்கு வரும் ஆசையை தியாகம் செய்யாமலும் கருத்து ரீதியான மோதல்கள் இல்லாமலும் நமது எதிரிகளை  வீழ்த்துவது சாத்தியமில்லை” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மீது தனது குடும்பத்திற்கும் ஆதிக்கத்தை ராகுல் காந்தி குறைக்க விரும்புவதையே அவரது  கடிதம் காட்டுகிறது. 133 வருட காங்கிரஸ் வரலாற்றில் நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்களை அதன் தலைவர்களாக அங்கம் வகித்து வருகின்றனர். “எனது சகாக்கள் காங்கிரஸ் தலைவராக யாரையேனும் நான்  வழிமொழிய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்” என்று ராகுல் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

 வலிமை மிகுந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர்,  வாரிசு அரசியலுக்கு எதிராக தனது பதவியை தூக்கி எறிவது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய  காட்சி.

வீடியோ செய்திகள்