jeevan-works-logo
booked.net
12 ராசிகளுக்குமான தின பலன்: [04.07.2019] மீன ராசிக்காரர்களுக்கான எச்சரிக்கை!!

Published: Thursday, Jul 04,2019 ,11:17:19am

மேடம்:

பணிச்சுமை அதிகமாக இருந்தாலும்  உற்சாகமாக செயல்படுவீர்கள். உடன் பணிபுரிவோர் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.  வெளியூர் செய்திகள் நன்மையைத் தரும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றம் காணும். 

ரிஷபம்:

 புதிய செல்போன்,  ஆடைகள் வாங்கி மகிழலாம்.  வெளியூரிலிருந்து நல்ல செய்திகள்,  உறவினர் வருகை நிகழும். தாய் மாமன்,  மனைவிவழியில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  அரசு வழி நன்மை உண்டு. 

மிதுனம் :

  வழிபாடு,  குரு காணிக்கை,  சாதுக்கள் தரிசனம்  போன்றவை இன்று நிகழலாம்.  உடன் பணிபுரிவோர் மனைவிவழியில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  வாழ்க்கைத் துணையோடு மகிழ்ச்சியாக இருந்து வருவீர்கள். 

கடகம் : 

  எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  அரசு தொடர்பான முடிவெடுக்க காத்திருந்தால், இன்று அது குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.  மற்றவர்களை ஏதேனும் ஒரு வேலையை செய்ய வற்புறுத்துவீர்கள். . அதற்கு எதிர்மறையான பதில் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்மம்: 

பேச்சைக்  குறைக்க வேண்டிய நாள் இது.  சோம்பலாக உணர்வீர்கள். திரும்பத் திரும்ப ஒரே வேலையை செய்து கொண்டிருப்பதாக தோன்றும்.  மாலை நேரங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் எண்ணம் மேலோங்கும். 

கன்னி: 

  வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. அனைத்து முயற்சிகளும் பலன் தரும் நாள் இன்று.  உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பார்கள். செல்போன், வாட்ச் போன்ற பொருட்களை கவனமாக கையாளுங்கள். 

துலாம்: 

  பண ஆதாயம் இன்று இருக்கும்.  அலுவலகத்தில் மதிப்பு கூடும்.  முன்பு செய்யாத வேலைகளை தொடங்குவதாக இருந்தால், இன்று ஒரு நாள் அதை ஒத்திப் போடுங்கள். ஒரு நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் இன்று உங்கள் சாமர்த்தியத்தால் ஒரு முடிவுக்கு வரும். 

விருச்சிகம்: 

 சோம்பலாக இருப்பது போல் தோன்றும்.  மேலதிகாரிகள் சுமூகமாக நடந்து கொள்வார்கள்.  அரசு வகையில் ஆதாயம் உண்டு. பணத் தட்டுப்பாடு ஏற்படும். சேமிப்பைக் கொண்டு சமாளிப்பீர்கள். 

தனுசு: 

 புதிய செல்போன் , ஆடைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  பழைய நண்பர்கள் உறவினர்கள் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும்.   சிறிய அளவில் பண நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினந்தோறும் செய்யும் வேலை ஆயினும் இன்று சிறிது கவனம் எடுத்து செய்யுங்கள்.

மகரம்: 

  பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்று நினைத்த விஷயங்கள் சுமூகமாக முடிவை காணும்.  தொலைதூர தகவல்கள் மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும். ஒன்றுக்கும் பயன்படாத வேலைகளை செய்யச் சொல்லி சிலர் உங்களை கட்டாயப்படுத்துவார்கள். 

கும்பம்: 

மாமன்,  சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்கலாம்.  மாலை வேளைகளில் நண்பர்கள் உறவினர் சந்திப்பு நிகழும்.  எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது இன்று.

மீனம்: 

 வரும் வசூலாகும் நாள் இன்று.  நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  கால், விரல்கள் போன்றவற்றில் சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கவனமாக செல்லவும். 

 

  

வீடியோ செய்திகள்