jeevan-works-logo
booked.net
வாரணாசியில் புரோகிதரால் நடத்தி வைக்கப்பட்ட முதல் ஓரினத் திருமணம்.

Published: Thursday, Jul 04,2019 ,11:08:20am

ஒன்று விட்ட சகோதரிகள் இருவர் தங்களது  பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

 வாரணாசியைச் சேர்ந்த ரோகான்யா அப்பகுதியைச் சார்ந்த இந்த பெண்கள் அங்கு உள்ள சிவ ஆலயத்தை அணுகி தங்களது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  இதற்கு அந்த புரோகிதர் மறுத்துவிட, இருவரும் அந்த கோயிலின் உள்ளேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

ஜீன்ஸ்,  டி ஷர்ட் அணிந்து  மேலே சிவப்பு நிற சால்வையை போர்த்தியபடி இவர்களது திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணம் நடைபெற்ற நேரத்தில் மிகப் பெரிய கும்பல் அந்த கோவிலில் கூடியிருக்கிறது.   அசம்பாவிதம் ஏதேனும் நடைபெறும் என்று எதிர்பார்த்த கோவில் நிர்வாகத்தினர் அப்பெண்களை விரிவாக வெளியேற்றினர். 

 உள்ளூர்வாசிகள் சிலர் அந்த புரோகிதரை,  திருமணத்தை நடத்தி வைத்ததற்காக கடிந்து கொண்டனர்.  இந்த இரு பெண்களில் ஒரு பெண் காண்பூர் நகரை சேர்ந்தவர் என்றும் இருவரும் சேர்ந்து ரோகான்யா நகரில் தங்கி இருந்தார்கள் என்றும் கோயில் புரோகிதர் பின்னர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு இது ஒரு புதிய தொடக்கம் தான்.

வீடியோ செய்திகள்