தமிழக போக்குவரத்து காலங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில்.
5000 புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1001 கோடி ரூபாய் செலவில் 3381 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 புதிய பிறந்தகளை இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
சென்னை மாநகரப் போக்குவரத்திற்கு மட்டும் 100 பேருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய ஆறு கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.