jeevan-works-logo
booked.net
பேனா கேமராவால் சக அதிகாரியை ஆபாச படம் பிடித்த இந்து அறநிலையத்துறை அதிகாரி…!!

Published: Thursday, Jul 04,2019 ,01:52:08pm

மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து  இருக்கின்றனர். 

இந்து சமய அறநிலைத்துறை பெண் அதிகாரி ஒருவர் பச்சையப்பன் மீது  காவல்துறையில் ஒரு பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதி சதுரகிரி மலையில் நடந்த அமாவாசை பூஜையில் பங்கேற்க சென்றிருந்தபோது குளியலறையில் குளிக்க சென்ற அந்தப் பெண் அதிகாரியை பேனா கேமரா உதவியுடன் ஆபாசமாக படம் பிடித்திருக்கிறார்,  பச்சையப்பன். குளித்து முடித்த பிறகு அங்கு பேனா கேமரா இருப்பதை அந்த அதிகாரி பார்த்திருக்கிறார். 

பாலியல் ரீதியாக தன்னை இணங்க வற்புறுத்தியதாக பெண் உதவி ஆணையர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இப்புகாரின் அடிப்படையில் அதிகாரி பச்சையப்பன் மதுரை மாவட்டம் பேரையூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மேல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை இழிவுபடுத்துதல்,  மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோ செய்திகள்