jeevan-works-logo
booked.net
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.

Published: Thursday, Jul 04,2019 ,01:45:44pm

திமுக பேச்சாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிவிப்பில் திமுக இளைஞரணி செயலாளராக பணியாற்றி வரும்  மு.பெ. சாமிநாதன் அவர்களை பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக இளைஞரணி செயலாளராக திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை தலைமை கழகத்தால் நியமிக்கப் படுகிறார் என்று தெரிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பை தொடர்ந்து அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் திமுக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் தன் பெற்றோரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.  கழக மூத்த உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

வீடியோ செய்திகள்