jeevan-works-logo
booked.net
அளவா சரக்கு அடிச்சா தப்பில்லை… அமைச்சரே சொல்லிட்டார்!

Published: Thursday, Jul 04,2019 ,07:43:01pm

மதுவை அளவாக அருந்தினால் பிரச்சினையில்லை என்று அமைச்சர் தங்கமணி என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி,  மதுவை அளவாக குடித்தால் பிரச்சினை இல்லை, அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது தான் பிரச்சனையாகும் என்றும், கள்ள சாராயத்தை  தடுக்கவே மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், அவை படிப்படியாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

நேரடியாக அனைத்து மது கடைகளையும் அடைத்தால் கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்றும்,  அதனாலேயே மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

6,132 கடைகளாக இருந்த எண்ணிக்கை 5,152  ஆக குறைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

மதுவை அளவாக குடித்தால் பிரச்சனை இல்லை என்றும்,   அதிகமாக குடித்தால் உடல் கெட்டுப் போகத் தான் செய்யும் என்றும்,  அவ்வாறு ஆகும்போது தங்களால் எதுவும் செய்ய இயலாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

 மதுவை அளவாக குடித்து,  வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்று அமைச்சர் சற்றுப் புரியும்படி அறிக்கை அளித்தால் நன்றாக இருக்கும்.   மிகத் தீவிரமாக அடிமையாக்கும் போதை பொருள்களில் மதுபானங்கள் முதல் இடத்தை வகிக்கின்றன. 

 அரசாங்கம் அப்படித்தான் விற்கும்,  அளவாக குடித்து கட்டுப்பாடாக இருப்பது உனது பொறுப்பு,  அதிகமாக குடித்து நீ செத்துப் போனால் அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லை என்று ஒரு அமைச்சரை பேசியிருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

வீடியோ செய்திகள்