jeevan-works-logo
booked.net
ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை!! நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் அறிவிப்பு!!

Published: Friday, Jul 05,2019 ,01:21:59pm

2019 - 20  ஆண்டுக்கான  நீதி அறிக்கை தாக்கல் இன்று நடைபெறுகிறது.  முக்கியமான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு மேலும் 1 லட்சம் மானியம்.
  •  வருமான வரி  தாக்கலுக்கு பான் கார்டு தேவை இல்லை ஆதார் கார்டு மட்டுமே போதும். 
  • வீட்டுக் கடனுக்கான வரி விலக்கில் கூடுதலாக 1 லட்சம் கோரலாம்.
  • தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களுக்காண இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு.
  • எரிபொருள் மீதான கலால் வரி ஒரு ரூபாய் உயர்வு.
  • பாதுகாப்பு துறை தொடர்பான தளவாடங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு. 
  • வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார். -  என் ஆர் ஐ க்கள் இந்தியா வந்த பிறகு 180 நாட்கள் காத்திருக்க அவசியம் இன்றி உடனடியாக ஆதார் வழங்கப்படும். 
  • வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீத வரி. 
  • 2022க்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கேஸ் இணைப்பு வழங்கப்படும். 
  • நாடு முழுவதும் 1.95  கோடி வீடுகள் கட்டி ஒரே பயனாளிகளுக்கு வழங்கப்படும். 
  • 5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
  • ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் இருந்து ரொக்கமாக எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும். 
  • மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடனுக்கு  வட்டி செலுத்திய விவரங்களை காண்பித்து வருமான வரி விலக்கு பெறலாம். 
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இனி வருமானவரித்துறை விசாரணைக்கு உட்படுத்த மாட்டார்கள்.
  • 400 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரி. 
  • 20 ரூபாய் நாணயங்கள் உள்ளிட்ட புதிய நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும். 
  • ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதில் உள்ள சிக்கல்களை களைய முன்னுரிமை வழங்கப்படும்.
  • நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மின்சார வாகனங்களை  ஊக்கப்படுத்த பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வீடியோ செய்திகள்