jeevan-works-logo
booked.net
வைகோவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை! தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு!!

Published: Friday, Jul 05,2019 ,01:29:00pm

கடந்த 2009ஆம் ஆண்டு ராணி சீதை மன்றத்தில் நிகழ்ந்த  ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, மத்திய அரசுக்கு  எதிராகவும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவும் பேசியதாக தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டார்.  இரு பிரிவினரிடையே பிரதட்சிணம் செயல்பாடு என மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது. 

 இவ்வழக்கை விசாரித்த எம்பி எம்எல்ஏ களுக்கான சிறப்பு நீதிமன்றம்,  இன்று அதற்கான தீர்ப்பை அளித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி  நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், வைக்க குற்றவாளி என்றும் நீதிபதி கூறினார். வைகோவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அவர் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டார். 

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வைகோ மாநிலங்களவை  உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வது, மற்றும் மாநிலங்களவை உறுப்பினராவதை இந்த தீர்ப்பு எந்தவகையிலும் பாதிக்காது என்றும்,  வைகோ தான் அவர் பேசவே இல்லை என்று தெரிவிக்காமல் தான் பேசியதை ஒப்புக்கொண்டதோடு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை என்று தெரிவித்திருப்பதால்  மேல்முறையீட்டின்போது வைகோ விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

வீடியோ செய்திகள்