jeevan-works-logo
booked.net
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

Published: Saturday, Jul 06,2019 ,12:44:13pm

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் முதன்முறையாக இந்த ஆண்டு இருந்து ஆன்லைனில் வெளியிடப்பட்டது.  51 ஆயிரத்து 176 பேர் இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வின் அடிப்படையில் அவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 8 ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 9-ம் தேதியும் நடைபெறும் என்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரை சேர்ந்தவர்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டு பாளையத்தைச் சேர்ந்த ஏ. கே. அஸ்வின் ராஜ் என்பவர் 677 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.  கோவை கணபதியைச் சேர்ந்த வி இளமதி 676 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

தமிழகத்தில் மொத்தம் 23 அரசு பொது மருத்துவ கல்லூரிகளும் ,ஒரு  அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதேபோல் 13 தனியார் பொது மருத்துவக் கல்லூரிகளும்,   18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. மொத்தம் 4 ஆயிரத்து 820 பொது மருத்துவ படிப்பிற்கான இடங்களும்,  1223 பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளன. 

 

வீடியோ செய்திகள்