jeevan-works-logo
booked.net
20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அமெரிக்காவில்!!

Published: Saturday, Jul 06,2019 ,12:50:37pm

 அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா ரிட்ஜ்கிரஸ்ட் நகரில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  வியாழன் அன்று 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்நிலையில் 7.1 என்ற அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. 

 வியாழன் அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான தொடர் சிறிய நடுக்கங்கள் ஏற்படும் வண்ணம் இருந்தது.  அதைத் தொடர்ந்து நேற்று மிகப்பெரிய அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் அனைவரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 

 

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில்  ரிட்ஜ்கிரஸ்ட் நகரில் , 6.4 ரிக்டர் அளவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நகரம் மொஹாவி பாலைவனப் பகுதியில் உள்ளது.

ஒரு சக்தி வாய்ந்த நில நடுக்கமும் அதைத் தொடர்ந்து நிலநடுக்க பின்னதிர்வுகளையும் அப்பகுதி மக்கள் உணர்ந்தனர்.  வீடுகளுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. சிறிய அளவிலான தீ விபத்தும் நிகழ்ந்துள்ளது. 

 காயமடைந்த மற்றும் உயிரிழந்த பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. 

இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் என்பது அசாம் பகுதியில் 1950 ஆம் வருடம் ஏற்பட்ட நிலநடுக்கம் தான்.  இது ரிக்டர் அளவில் 8.6 ஆக பதிவானது. உலகின் மிகப்பெரிய மிக பயங்கரமான நிலநடுக்கம் என்பது சிலிப் பகுதியில் 1960 ஆம் வருடம் ஏற்பட்ட நிலநடுக்கம்.  இது ரிக்டர் அளவுகோளில் 9.5 ஆக பதிவானது. 

தமிழகத்தை உலுக்கிய 2004 சுனாமி ஏற்பட காரணமாய் இருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.8 ஆகும்.  இது கடலுக்கடியில் ஏற்பட்ட தால் சுனாமி ஏற்பட காரணமானது. 

 இயற்கையின்  சக்திக்கு முன் மனிதன் எனும் ஒரு தூசுக்கு சமானம் என்று அவ்வப்போது நினைவு படுத்துவது இதுபோன்ற நில அதிர்வுகள் தான். 

வீடியோ செய்திகள்