jeevan-works-logo
booked.net
சும்மா வாக்குறுதி கொடுத்துகிட்டு இருக்காதீங்க… நீட் தேர்வு குறித்து உயர் நீதிமன்றம் அறிவுரை!!

Published: Friday, Jul 05,2019 ,02:02:01pm

 நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என அனைத்து அரசியல் கட்சிகளும்  வாக்குறுதி அளிப்பது வாடிக்கையாக இருக்கிறது. இனி இதுபோல் வாக்குறுதி அளித்து கொண்டே இருக்காதீர்கள் என்று உயர் நீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. 

வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில் ,அகில இந்திய போட்டித்தேர்வுகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாததால் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். 

கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  இந்த ஆண்டும் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என  வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 

 மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது அரசு தரப்பில்  மேலதிக விபரங்களை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன்,  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவோம் என்று அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வாக்குறுதி அளித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்றும்,  விளக்கு பெறுவதில் அரசியல் கட்சிகள் உறுதியாக இருந்தால் மட்டுமே அவ்வாறு கூறுமாறும். கேட்டுக்கொண்டார் .

 மேலும் அவர் கூறுகையில்,  கல்வித் துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் நீட் தேர்வை முழுமையாக ஏற்றுக் கொண்ட நிலையில்,  கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கும் தமிழகம் ஏன் எதிர்க்கிறது என்று கேள்வி எழுப்பினார். 

 நீட் தேர்வுக்காக தற்கொலை செய்து கொண்ட அனிதா குடும்பத்திற்கு வழங்கிய நிவாரணம் போல ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்துகொள்ளும் பிற மாணவிகளின் குடும்பங்களுக்கு வழங்க முடியுமா என்றும்  விளக்கம் அளிக்க நீதிபதி அரசுக்கு உத்தரவிட்டார். 

 இந்த வழக்கு மேலும் 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.  இதுகுறித்து பதில் தர வேண்டியது ஆளும் அரசு மட்டுமல்ல. நீட் தேர்வு வேண்டாம் என்று முழங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தான்.

வீடியோ செய்திகள்