jeevan-works-logo
booked.net
ஐந்து வயதில் குடும்பத்தோடு தெருவில் திரிந்து வாழ்ந்த சிறுவன். எதிர்கால வாழ்வுக்கு உங்கள் உதவி தேவை.

Published: Friday, Jul 05,2019 ,06:33:23pm

வளர்ந்த பெரிய மனிதர்கள் பிச்சை  எடுப்பதை பார்க்கும் போதே நமது மனம் கனத்துப் போகும்.  பச்சிளம் பாலகன் ஒருவன் தெருவில் பிச்சை எடுத்து திரிவதை பார்த்தால்  யாராக இருந்தாலும் மனம் கலங்கத் தானே செய்யும்.

படத்தில் காணும் இந்த சிறுவன் தெருவில் பிச்சை எடுத்து வாழ்ந்து இருக்கிறான்.  உடன் சேர்ந்து பிச்சை எடுத்தவர்கள் யார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.  அவனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள். ஆம், அவனது தாய்க்கு இதுதான் தொழிலே. பிள்ளையை பெற வேண்டியது,  அதை வைத்து பிச்சை எடுக்க வேண்டியது. ஒன்றிரண்டு அல்ல, அந்த தாய்க்கு இது போல் நான்கு பிள்ளைகள். 

 இந்த கொடுமையை பார்த்த சில நல்ல உள்ளங்கள் அளித்த புகாரின் பெயரில்,  அந்த மொத்த குடும்பமும் மீட்டெடுக்கப்பட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

படத்தில் காணும் சிறுவன்,  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பாரதமாதா சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறான். 

 இவனது எதிர்காலத்தை நீங்கள் நினைத்தால் ஒளிமயமாக்க மாற்ற இயலும்.  உணவுப் பொருளாகவோ, கல்விக்கு உதவும் பொருட்களாகவோ, பணமாகவும் நீங்கள் இவனைப் போன்ற பிள்ளைகளுக்கு உதவலாம்.  மேலும் உதவிக்கு பாரதமாதா குடும்ப நல சேவை நிறுவனத்தை  அணுகுங்கள். 

தொடர்புக்கு: 

Bharathamatha Family Welfare Foundation

No.47, South Street, Post Box No. 19,

Thiruthuraipundi - 614 713.

Thiruvarur District, Tamil Nadu. INDIA.

வீடியோ செய்திகள்